இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான இன்று லண்டனில் தமிழ்ர்கள் கவன்யீர்ப்பப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.
இன்று மதியம் 1:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Oxford Circus, Oxford Street, Tottenham Court Road, Piccadilly Circus, ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கு முன்பாகவும், வீதிகளிலும் நின்று இலங்கைத் தீவில் நடைபெறும் தமிழின அழிப்பு, மற்ரும் மனித உரிமை மீறல்கள் போன்ர விடையங்கை எடுத்து விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
அத்தோடு மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பிரித்தானியப் பிரதமர் இல்லம் முன்பாக அமைந்திருக்கும் Downing Street பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதில் இன்று பிரித்தானியாவில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரித்தானிய இளையோர் அமைப்பு, பிரித்தானியத் தமிழ்ர் ஒன்றியம், பிரித்தானியத் தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பிரதினிகளும் ஒன்றாக கலந்து இப் போராட்டத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment