சேனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' நோபல் சமாதானப் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், ஆஸ்ட்ரேலியாவின் கிரீன் சென்ட்டர் லீ டியனோனும் இணைந்து...,
|
நோபல் பரிசுக் குழுவுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ளனர்.சரியான நேரத்தில் சேனல்-4 வெளியிட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசின் அனைத்துலக மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும், இது இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் உண்மை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகவும் மக் டொனா தெரிவித்துள்ளார்.
சேனல் - 4 தொலைக்காட்சியில் ஆவணப்படத்தை நோபல் பரிசுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதன் மூலம், இலங்கையில் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுடன், அங்கு நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதியையும், அமைதியையும் கொண்டு வரும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment