
இலங்கையின் வடக்கில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவதானித்து உள்ளனர்.
இந்த அவதானத்தை 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்து உள்ளனர்.
-வடக்கை மீளக் கட்டியெழுப்புவது என்பது இலங்கை அரசுக்கு மிகவும் சவாலான விடயம். கிழக்கை மீள கட்டியெழுப்புகின்ற நடவடிக்கையை காட்டிலும் கடினமானது.
உள்நாட்டு வர்த்தக முயற்சிகளை விஸ்தரிக்க முடியாத நிலையுடன் வேண்டிய வேலை வாய்ப்புகளை வழங்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.
ஆனால் பெரிய வெளியிடத்துக் கம்பனிகளை பயன்படுத்துவது உள்நாட்டவர்களின் கோபத்தை தூண்டக் கூடும். பொருளாதாரம் என்று கண்டிப்பாக பார்க்கின்றபோது அரசின் உத்தி கொஞ்சம் பலன் கொடுத்துத்தான் இருக்கின்றது.
ஆனால் முரண்பாட்டின் வரலாற்றை மறந்து விட்டது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. கடந்த ஜனவரி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ரீதியில் 58 சதவீத வாக்குகளை மஹிந்த ராஜபக்ஸ பெற்றார்.
ஆனால் அவருக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்தது 24 சதவீத வாக்குகள். சக வேட்பாளருக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கிடைத்த வாக்குகளை விட இரு மாகாணங்களிலும் மஹிந்தர் குறைந்த வாக்குகளையே பெற்று இருக்கின்றார்.
அரசின் வடக்குக்கான அபிவிருத்தித் திட்டம் அடிப்படைப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி இருக்கின்றதே ஒழிய இன முரண்பாட்டை களையத் தவறி விட்டது.-
இவ்வாறு இதில் உள்ளது.
No comments:
Post a Comment