இவ்வாறு சம்மாந்துறை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ.எம்.ஹஸன் அலி கேள்வி எழுப்பினார்.
சம்மாந்துறையில் அமைப்பாளர் இல்லத்தில் இடம்பெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று முஸ்லிம்கள் சிந்திக்கவும் முடியாத அழுது கொள்ளவும் முடியாத நிலையில் உரிமையற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அபிவிருத்தி அரசியலைப் பற்றி பேசியதாக முஸ்லிம் காங்கிரஸார் தெரிவித்துள்ளார்கள். அப்படியாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் அவரோடு உரிமை அரசியலைப் பற்றி பேசவில்லையா என்று கேட்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் கட்சிகளினால் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். பட்டம்,பதவிகளுக்காக சமூகத்தினை விலை பேசுகின்றவர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களும் காணப்படுகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment