இந்த வாரத்தின் வட அமெரிக்காவின் மிகப்பெரிய கொண்டாட்டமாக Super Bowl XLVI போட்டி அமையப்போகின்றது. அமெரிக்காவின் Indianapolis ல் பெப். 05, மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ள 46வது Super Bowl போட்டியில் New England Patriots மற்றும் New York Giants அணிகள் மோதவுள்ளன. இப் போட்டியானது அமெரிக்காவில் சுமார் 90 மில்லியன் மக்கள் நேரடியாகவும் NBC தொலைக்காட்சி வழியாகவும் பார்க்கும் போட்டியாகும், அத்தோடு 185 நாடுகளில் 30 மொழிகளில் இப்போட்டி நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.
இப்போட்டியின் ஜனரஞ்சக அம்சமாக போட்டிக்கு முன்னரான இசைநிகழ்ச்சியும், போட்டியின் இடைவேளையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுமே முக்கிய இடம் வகிக்கின்றன. இவ்வருட இசைநிகழ்ச்சியில் மடோனா மற்றும் தமிழ் பாப் பாடகி மாயா(M.I.A) போன்றவர்களது இசைநிகழ்சிகள் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டி இடைவேளையின் மிக முக்கிய அம்சமாக விளம்பரங்கள் இவ்வருடமும் முக்கிய இடத்தினை பெறுகின்றது. இவ்வருடம் ஒவ்வொரு 30 செக்கணுக்கும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வருட விளம்பரங்களில் கனடாவின் பியர் தயாரிப்பு நிறுவனமான Budweiser Canada, Teleflora � Adriana Lima, The Dictator, G.I. Joe 2, Kia Optima, AdAge Thinks, Cadillac ATS, Coca-Cola, Go Daddy போன்றன குறிப்பிடத்தக்கது. இப்போட்டி நிகழ்ச்சிகள் கனடாவின், ரொறோண்டோ, மொன்றியல் மற்றும் வன்கூவரில் பிரமாண்ட திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வருட போட்டியின் மிகப்பிரதான அம்சமாக போட்டி நிகழ்ச்சிக்கு முன்னரான கலந்துரையாடலில் அமெரிக் ஜனாதிபதி பராக் ஓபாமா கலந்து கொள்கின்றார்.

No comments:
Post a Comment