கடல் புலிகளின் தளபதியான சூசை அவர்களின் மனைவி முள்ளிவாய்க்காலில் இருந்து 2009ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி வெளியேறி இருந்தார். அவர் அங்கிருந்து கடல் மார்க்கமாகத் தப்பி இந்தியா செல்ல முனைந்தவேளையில் இலங்கைக் கடற்ப்படையால் கைதுசெய்யப்பட்டார் என்பது யாவரும் அறிந்த விடையம். அவரிடம் பெருந்தொகையான பணமும் நகைகளும் இருந்ததாக இலங்கை இராணுவம் செய்தி வெளியிட்டது.
பின்னர் அவர் தனியான சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி கொழும்பு புறநகர்ப்பிரதேசம் ஒன்றில் வசித்துவருகிறார். இவ்விடம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்பதும் இவரை இரகசியப் பொலிசார் அவதானித்து வருவதும் பலர் அறிந்த விடையம். புலிகளின் சிரேஷ்ட தளபதிகள் சிலர் மேல் கரி பூசும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தற்போது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதற்கு அவர்களது உறவினர்களையே பயன்படுத்திவருகிறது இலங்கை அரசு. இதனூடாக மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள புலிகளின் சிரேஷ்ட தளபதிகளை மக்கள் மனதில் இருந்து அகற்ற இலங்கை அரசானது பெரும் முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் சிங்கள அரசின் அடிவருடியான த நேஷன் செய்திச் சேவை சூசையின் மனைவியை ஒரு நேர்காணல் கண்டதாகத் தெரிவித்துள்ளது. அதில் சூசையின் மனைவியிடம் பல கேள்விகள் கேட்க்கப்பட்டதாகவும் அவர் கூறிய பதில் என்று கூறி பல விடையங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் த நேஷன் நிருபர் ஒருவர் சூசையின் மனைவியிடம் "நீங்கள் மே 12ம் திகதி புதுக்குடியிருப்பில் வைத்து பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் பார்த்தீர்களா" என்று கேட்டுள்ளார். சூசையின் மனைவி "ஆம்" என்று பதிலளித்ததாக நிருபர் கூறுகிறர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், மே12ம் திகதி புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலில் தான் இருந்தனர் புதுக்குடியிருப்பு இலங்கை இராணுவத்தின் கைகளில் அப்போது வீழ்ந்து விட்டது. மற்றும் மே 18ம் திகதியோடு முள்ளிவாய்க்காலும் இராணுவத்தின் கைகளில் வீழ்ந்துவிட்டது. அப்படி இருக்கும்போது சூசையின் மனைவி ஏன் இவ்வாறு பதிலளித்தார் ?
ஒருவேளை நிருபர் தான் பிழையாகக் கேட்டார் என்றாலும், முள்ளிவாய்க்காலில் இருந்த சூசையின் மனைவி மே 12, தாம் புதுக்குடியிருப்பில் இருந்ததாக ஏன் சொல்லவேண்டும் என்ற கேள்விகள் இங்கே எழுகின்றது. த நேஷன் என்னும் செய்திச் சேவை உண்மையில் சூசையின் மனைவியிடம் தான் இந்தப் பேட்டியை எடுத்ததா என்ற கேள்விகளும் இல்லையேல் அவரை மிரட்டி இந்த பேட்டியை இவர்கள் எடுத்தார்களா என்ற சந்தேகமும் வலுப்பெறுகின்றது. பெருந்தொகையான நகைகளுடன் அவர் கைதானார் என்று சொல்லிவரும் இணையங்கள், இலங்கை அரசு வன்னியில் பீப்பா பீப்பாவாக கைப்பற்றிய தமிழர்களின் நகைகள் குறித்து எதுவும் பேசுவது இல்லையே ஏன் ? அதற்கு என்ன நடந்தது என்பது குறித்து எவரும் கேள்விகள் கேட்ப்பது இல்லை.

No comments:
Post a Comment