தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான சுபாஸ் சந்திர போஸ் நேதாஜியுடன் ஒப்பீடு செய்து இருக்கின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசியல்வாதியுமான பழ. நெடுமாறன்.
பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் என்று இவர் நூல் ஒன்று எழுதி இருக்கின்றார். இந்நூல் 1000 பக்கங்கள் வரை கொண்டது. நூல் வெளியீட்டு விழா வரும் மாதங்களில் இடம்பெற உள்ளது.
இந்நூலிலேயே பிரபாகரனையும், சந்திர போஸையும் ஒரு கட்டத்தில் ஒப்பீடு செய்து இருக்கின்றார் நெடுமாறன்.
-இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த நிலையிலேயே அவர் உலகமறிந்த தலைவர்.
ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவி செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர் வீரர்களை மீட்டு அவர்களைக் கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார்.
இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபாகரனை நேதாஜியுடன் ஒப்பிட முடியாது. வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை.
இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணை நின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவி புரிய முன்வரவில்லை.
ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித் தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டியடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கிய விதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப் போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்?
இன்னமும் புரியாத புதிர்தான்.
இன்னமும் புரியாத புதிர்தான்.
No comments:
Post a Comment