Translate

Saturday, 4 February 2012

225 கி.மீ கடந்து 7 ஆவது நாளாக பிரான்சில் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்!


காணொளி மற்றும் படங்கள் இணைப்பு:

225 கி.மீ கடந்து ஆவது நாளாக பிரான்சில் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்!

கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர்.


இன்று 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர். 

பிரித்தானியாவில் வடகிழக்கு லண்டன் பகுதியில் இருந்து 7 தமிழ் உணர்வாளர்கள் நேற்ரைய தினம் பிரான் சென்று அவர்களைச் சந்தித்து நேற்றைய நடைபயணம் முடியும் வரை அவர்களுடன் இருந்து நடைபயணம் மேற்கொள்பவர்களை ஊக்குவித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தமது ஆதரவைத் தெரிவித்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நடைபயணமானது நாளை மறு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரை சென்றடையவுள்ளதோடு அங்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொள்ளவுள்ளனர் என நடைபயனம் மேற்கொள்ளும் திரு.ஜெயசங்கர் அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment