Translate

Friday, 3 February 2012

லட்சம் கோடி மெகா ஊழலும் - மலையாளிகளும் தமிழர்களும்

லட்சம் கோடி மெகா ஊழலும் - மலையாளிகளும் தமிழர்களும் - 
மலையாளிகளை காப்பாற்றும் மத்திய அரசு!!! 

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் தலைவர் மலையாளி கே. மாதவன் நாயரின் தலைமையில் - தனியார் நிறுவனமாகிய மல்டி மீடியா நிறுவனத்துடன் 2005-ல் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. 


இதன்படி, மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு 70 மெகா ஹெர்ட்ஸ -க்கு ரூ.1,000 கோடி விலைக்கு 12 ஆண்டுகளுக்கு விற்றுள்ளது .

அதே கால கட்டத்தில் 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கு பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய இந்திய அரசு நிறுவனங்களுக்கு ரூ.1,300 கோடி விலைக்கு விற்றுள்ளது

இதனால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு என்றும் செய்திகள் வெளியாகின.அலைகற்றை ஊழல் வெளியான அதே கால கட்டத்தில் வெளி வந்த இந்த ஊழல் அன்று ஒரு நாள் மட்டும் தலைப்பு செய்தியானது .பின்னர் மூடி மறைக்கப்பட்டது .

பெயரளவிற்கு மாதவன் நாயரைக் நடுவண் அரசு பதவியை விட்டு நீக்கியிருக்கிறது.இதற்கே மலையாளிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள் .

அலைக்கற்ற ஊழலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வட இந்திய தலைவர்கள் கூட்டு சேர்ந்து தங்களை காப்பாற்றி கொள்ள, சிதம்பரம், ராசா என தமிழர்களை பலிகாடாக்குகிறார்கள் .இதனால் ஒட்டு மொத்த தமிழர்களும் தலை குனிந்து நிற்கிறார்கள் .

நடுவண் அரசு மலையாளியை காப்பாற்றுகிறது .ஆனால் தமிழர்களை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல் பட்டு வருகிறது .

கூடங்குளம் தமிழீழ சிக்கலுக்கு எதிர்பாக குரல் கொடுக்கும் கலாம் ஏன் அவர் துறை சார்ந்த ஊழலை எதிர்த்து ,குரல் கொடுக்கவில்லையே ஏன் .மலையாளி என்பதாலா ? 

No comments:

Post a Comment