எனக்கு மதுவும் மாதுவும் தந்த மஹிந்தவை நீங்களும் நம்புங்கோ: ஒட்டுக்குழு கருணா
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபங்கேற்கச் சென்று அங்கு சிறிலங்கா அரசுக்கு எதிராகச் செயற்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் தான் அம்பலப்படுத்துவேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மகாநாட்டின் போதே அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
தொடாந்து கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போது நாடு கடந்த நிலையில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எங்கெங்கு உள்ளனர் என்ற பட்டியலும் என்னிடம் உள்ளது. அதனையும் நான் அம்பலப்படுத்துவேன். மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் தேவை இல்லை, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இவை வழங்கப்பட்டால் பாரிய பிரச்சிகனைகள் ஏற்படும். கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசோ தென்னிலங்கையோ நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டா.
ஊடகவியலாளர்: அப்படி எனில் எவற்றினைக் கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
கருணா: அதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தீர்மானிக்கும். இதற்கு மேலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களும் நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும். அத்துடன் தென்பகுதி மக்களினதும் ஏனைய இனத்தவர்களினதும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இது சாத்தியமற்றதொரு விடயம். அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
ஊடகவியலாளர்: வேலுப்பிள்ளை பிரபாகரனின் குற்றம் குறித்துப் பேசுகிறீர்கள். அந்த இயக்கத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த நீங்கள் பல்வேறு குற்றங்கள் செய்தமை குறித்து நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளதே?
கருணா: ஆம்: என்னை அழைத்து விசாரிக்கலாம்தானே?
ஊடகவியலாளர்: பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் உங்களுக்கும் கிழக்கு முதல்வருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா?
கருணா: அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் அவர் தனது உத்தியோபூர்வ கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment