Translate

Friday 3 February 2012

பிரித்தானியாவில் நாளை மாபெரும் போராட்டம் அறிவிப்பு !

பிரித்தானியாவில் நாளை மாபெரும் போராட்டம் அறிவிப்பு !
இலங்கையின் சுதந்திர தினமானா நாளை (04.02.2011) பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்​கு முன் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் ஊடக அடக்குமுறை, மனிதப் படுகொலைகள், யுத்தக்குற்றங்கள், இன அழிப்பு மற்றும் காணமல் போதல் என்பன மிகவும் மலிந்து கிடக்கின்ற நிலையில் அங்கே கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை தமிழர்கள் பறைசாற்றும் நாளாக, நாளையதினம் மாறவேண்டும். தமிழர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்காத நாட்டின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கரி நாள் ! 


இதனை உலகறியச் செய்ய, பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலத்துக்கு முன்னால் தமிழர்கள் ஒன்றிணைந்த குரலில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். புலிகளையும் தமிழ் மக்களையும் தோற்கடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு சிங்களம், நாளை காலி முகத்திடலில் பாரிய சுதந்திர தின விழாவைக் கொண்டாட உள்ளது. இந் நிலையில் பிரித்தானியத் தமிழர்கள் அனைவரும் திரண்டு சிங்கள தேசத்தின் சுதந்திர தினம் எமது கரி நாள் என்பதனை பறைசாற்றவேண்டும் ! இதுவே புலம்பெயர் மக்களின் சக்தி என்ன என்பதனை உலகிற்க்கு எடுத்துக்காட்டும். இப் போராட்டம் நடைபெற முறையான அனுமதி யாவும் பொலிசாரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்த உள்ளனர்.

நாளை சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. தொடரூந்து நிலையம் வெஸ்மினிஸ்டர் ஆகும்.
ADDRESS
10 Downing St
London
SW1A 2AA

No comments:

Post a Comment