கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கை தொடர்பில், அவுஸ்திரேலியா தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும், த ஒஸ்ட்ரேலியன் நாளிதழ் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் இந்த அறிக்கை தொடர்பிலும்,இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பிலும் தமது நிலைப்பாடுகளை தெரியப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் அவுஸ்திரேலியா, இலங்கை தொடர்பிலான தமது கொள்கையை வெளியிட வேண்டிய தருணம் வந்துள்ளதாக,அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டு கொள்கை முன்னகர்வின் ஒரு கட்டமாக மனித உரிமை நிலவரங்களை அவுஸ்திரேலியா முன்னெடுத்து செல்கிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு அமைச்சர் என்ற அடிப்படையில், கெவின் ரட், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பிலும்,கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலும் தமது வெளிநாட்டு கொள்கையை வெளிப்படுத்த வேண்டும் என த ஒஸ்ட்ரேலியன் நாளிதழ் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment