Translate

Monday, 27 August 2012

ஜெனிவா, ஐநா. பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை


ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த தென்னாபிரிக்காவின் மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூக்காவே இந்தப் பிரேரணையை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ளார்.
இதனையடுத்து, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், மேலதிகத் தகவல்களை யஸ்மின் சூக்கா அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நேற்று வெள்ளிக்கிழமை முதல்  சேகரித்து வருதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியமித்த நிபுணர் குழுவின் அங்கத்தவர்களில் யஸ்மின் சூக்கா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ளுமாறு இதுவரை இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment