செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல முறை உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு இது வரை செவி சாய்க்கவில்லை. அதானால் இம்முறை விடுதலை அடையும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என முகாம் வாசிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் . அவர்களுக்கு ஆதரவாக தமிழ் உணர்வுக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல் வேறு வகையில் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று செங்கல்பட்டில் அனைத்து தமிழ் உணர்வு கட்சிகளும் கலந்து கொண்டு செங்கல்பட்டு முகாம் தமிழர்களை விடுதலை செய்வதற்கு போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் மதிமுக மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு, மனித நேய மக்கள் கட்சி சாஜகான், தோழர் அதியமான் , தோழர் திருமுருகன் , காசி மக்கள் மன்றத்தினர், பெரியார் திக டேவிட் பெரியார் மற்றும் பல அமைப்பு சாரா தமிழ் உணர்வாளர்கள் பங்கு பெற்று தங்கள் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்தனர். ............... read more
No comments:
Post a Comment