Translate

Friday, 22 June 2012

கேட்டதைப் போல 2 மடங்கு தொகையை அள்ளிக் கொடுத்த லண்டன் ஏ.டி.எம். பணம் எடுக்க போட்டா போட்டி.


லண்டன் மாநகரில் டோட்டன்ஹாம் கோர்ட் சாலையில் சான்ஸ்பரி என்ற இடத்தில் இருந்த ஏ.டி.எம். ஒன்று வாடிக்கையாளர்கள் கேட்டதைப் போல 2 மடங்கு தொகையை அள்ளிக் கொடுத்தது. ஆனால் கணக்குச் சீட்டிலோ பாதியைத்தான் கழித்தது.


இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்த வாடிக்கையாளர்கள் தாங்களே மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று அதிகபட்சம் எவ்வளவு எடுக்க முடியுமோ எடுத்தனர். அலுவலக நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் தகவல் தந்து கிட்டத்தட்ட அந்த ஏ.டி.எம். இயந்திரத்தைச் சூறையாடினர். ஆனால் நேர்மையான ஒரு வாடிக்கையாளர் நடப்பதைப் பார்த்து வங்கிக்குத் தகவல் தந்தார். உடனே வங்கி நிர்வாகம் அந்த இயந்திரத்தைச் செயலிழக்க வைத்து நஷ்டத்தைத் தடுத்தது.

இந்தத் தவறு ரொக்கத்தை நிரப்பிய வங்கி ஊழியரின் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கிறது. இப்படி நஷ்டம் ஏற்படுத்திய வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பது எளிது என்றாலும் வங்கி நிர்வாகங்கள் இப்படி இரட்டிப்புப் பணம் பெற்றவர்களிடம் அதைத் திரும்பக் கேட்பதில்லை. ஏனென்றால் இயந்திரம் தரும் கணக்குச் சீட்டில் அவர்கள் கேட்ட தொகையைத்தான் தந்ததாக பதிவாகியிருக்கும். வாடிக்கையாளராக மனசாட்சிப்படி திருப்பித் தந்தால்தான் உண்டு.

No comments:

Post a Comment