திருமுறிகண்டிப் பகுதியில் இராணுவத்தினர் நிர்ணயித்த எல்லைக்குள் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள நிலையில், சொந்த இடங்களை கேட்டு மக்கள் குழப்பம் விளைவிக்கக்கூடாது என்பதற்காக மீள்குடியேறும் மக்களுக்கு தலா 1லட்சம் ரூபாவை வழங்கி மக்களை பேசாமல் செய்வதற்குரிய நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வேறு எந்தப் பிரதேசங்களிலோ இதுவரை 1லட்சம் ரூபா வழங்கப்பட்டது கிடையாது.
இந்நிலையில், திருமுறிகண்டி மக்களுக்கு மட்டும் விசேடமாக இந்த 1லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.
ஏனெனில் சொந்த இடங்களில் குடியேற்றுமாறு மக்கள் குழப்பம் விளைவிக்ககூடாது என்பதற்காகவே.
ஏற்கனவே குறித்த மீள்குடியேற்றத்தில் திருப்தியில்லை என மக்கள் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்ட நிலையில், தொடர்ந்தும் தமது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் வவுனியா முகாமிலுள்ள 46 குடும்பங்களுக்கும், குறித்த 1லட்சம் ரூபா விவகாரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் மீள்குடியேற்றத்தின் போது அதற்கு உடன்பட்டுப்போகிறவர்களுக்கு நாமல் ராஜபக்ச இந்த நிதியினை கொடுப்பார் எனவும், நேரடியாகவே ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரசாரம் செய்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். எனினும் இதற்கும் பல மக்கள் உடன்படாது தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment