Translate

Thursday, 21 June 2012

3 பேரால் கற்பழிக்கப்பட்ட இலங்கைப் பெண்: குவைத்தில் சம்பவம் !

குவைத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பத் தயாராக இருந்த பெண்ணொருவரை பலாத்காரமாகக் கடத்திச் சென்று அவர் மீது மூன்று இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் குறித்து நாம் ஏற்கனவே செய்திவெளியிட்டிருந்தோம். தனது எஜமானுடன் வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த குறிப்பிட்ட பெணணை, வாகனத்தில் வந்த 3 குவைத் இளைஞர்கள் கடத்தியுள்ளனர். பிரமாண்டமான கட்டடம் ஒன்றுக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று அப்பெண்ணை அவர்கள் கற்பழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் குவைத் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


பணிப்பெண்ணின் எஜமான், தான் அம் மூவரையும் பார்த்ததாகவும் அவர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிரவிசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என ஆராபியன் ரைம் என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது. பொலிசார் குற்றவாளிகள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்த மாதிரிப் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்

No comments:

Post a Comment