Translate

Thursday 21 June 2012

லண்டன் கடை உரிமையாளர்களே கவனம்: புது சுத்துமாத்தில் இறங்கியுள்ள வெள்ளையர்கள் !

லண்டனில் கடை வைத்திருக்கும் தமிழ் உரிமையாளர்களே கவனம் ! புதிதாக ஒரு சுத்துமாத்தில் சிலர் இறங்கியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. TFL என்று அழைக்கப்படும் லண்டன் போக்குவரத்து கழகம், கடைகளுக்கு ஒயிஸ்டர் இயந்திரத்தை வழங்கிவருகிறது. பலர் இந்த இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளார்கள். இவ்விண்ணப்பங்களை எப்படியோ களவாடியுள்ள ஒரு கும்பல், தமிழ் கடை உரிமையாளர்களை தொலைபேசி மூலம் அணுகி, உங்களுக்கான ஒயிஸ்டர் இயந்திரம் இன்னும் 10 நாட்களில் பொருத்தப்படும் என்று கூறி, 450 பவுண்டுகளை குறிப்பிட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் கட்டுமாறு கோருகின்றனர்.


இக் கும்பலுக்கும், லண்டன் போக்குவரத்து கழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எமக்கு தெரிந்தவரை 3 தமிழ் கடை உரிமையாளர்கள் இதுவரை ஏமாந்துபோயுள்ளார்கள். வால்த்தம்ஸ்ரோ பகுதி மற்றும் ஈஸ்ட்ஹம் பகுதியில், ஆரம்பித்த இந்த சுத்துமாத்து தற்போது லண்டன் பகுதியில் முழுவதும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது. இக் கும்பல் கொடுக்கும் வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து பார்கும்போது, அது பிரித்தானியவிற்கு வெளியே உள்ள ஐலவைட்டில் இயங்கும் ஒரு வங்கி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி சில தமிழ் கடை உரிமையாளர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இருப்பினும் ஐலவைட்டில் வங்கி இருப்பதால், விபரங்களை அறிவதில் பொலிசாருக்கு காலதாமதம் ஏற்படலாம். அதற்கு முன்னதாக இக் கும்பல் பலரிடம் பணத்தை சுருட்ட முனையலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ் கடை உரிமையாளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பலர் அதிர்வுடன் தொடர்புகொண்டு, இதுதொடர்பாக தகவல்களைத் தந்துள்ளனர். மேலதிக விபரங்கள் எவருக்காவது தெரியுமே ஆனால், தயவுசெய்து எம்மோடு தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment