Translate

Thursday, 21 June 2012

இலங்கையில் சிறுவர்கள் கட்டாய விபச்சாரத்தில் அமெரிக்க அறிக்கை.


இலங்கையில் சிறுவர்கள், பெண்கள் அதிகம் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிலும் பெண்களைவிட சிறுவர்கள் பலாத்காரமாக கடலோரா சுற்றுலா தள பகுதிகளில் பாலியல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் நேற்று (19) வெளியிட்டுள்ள மனித கடத்தல் தொடர்பான வருடாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தோட்ட உலர் மண்டல விவசாயத்துறை, மீன்-உலர்த்தி தொழில் துறை மற்றும் மீன் பிடித்துறையில் சிறுவர்கள் பலாத்காரமாக தொழிலுக்குச் சேர்க்கப்படுவதாக ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேயிலை தோட்டப்புற தமிழ் சிறுவர்கள் சிலர் கொழும்பில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுவதாகவும் அவர்கள் உடல், உள, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு ஊதியம் வழங்கப்படாமல் கட்டுப்பாடுகளுடன் அடக்கி வைக்கப்படுவதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சிறு எண்ணிக்கையிலான தாய்லாந்து, சீனா உள்ளிட்ட தெற்காசிய, ஐரோப்பிய பெண்கள் இலங்கையில் கட்டாய விபச்சாரத்திற்கு உட்படுத்தப்படிருக்கலாம் என அறிக்கையில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடத்தல்களை குறைக்க இலங்கை அரசு முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் இவற்றை குறைக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் எந்த கடத்தல் குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை. இதனால் கடுமையான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு தவறியுள்ளதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தின் மாதாந்திர கூட்டங்கள் மூலம் மோசடி ஆட்சேர்ப்பு குற்றங்கள் தொடர்புடைய இரண்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக 17 நாடுகள் மனித கடத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது அவற்றுக்கு உடந்தையாக ஒருப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, கியூபா, கானா, சவுதி அரேபியா, எரித்திரியா, ஈரான், வட கொரியா, குவைத், லிபியா, மடகாஸ்கார், பப்புவா நியுகினி, சுரினாம், சிரியா, யேமன் மற்றும் சிம்பாவே என்பன அந்த 17 நாடுகளாகும்.

No comments:

Post a Comment