Translate

Thursday 21 June 2012

திருத்த முடியாத இடத்தில் சிங்கள இனவாதக் கட்சி


தமிழ்க் கட்சிகள் மீது வழக்கு உயர்நீதிமன்றில் பேரினவாதக் கட்சி தாக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உட்பட நான்கு தமிழ்க் கட்சிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நான்கு கட்சிகளின் நோக்கங்களில் பிரதானமானது ஐக்கிய இலங்கையைப் பிரித்துத் தமிழர்களுக்கு என்று தனிநாடு ஒன்றை உருவாக்குவதே ஆகும். எனவே, இக்கட்சி களை பிரிவினைவாதக் கட்சிகளாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரியே உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கள ஜாதிக பெர முன என்ற கட்சியின் பொதுச் செயலாளர் ஜயந்த லியனகே என்பவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இலங்கைத் தமிழ ரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (ரெலோ) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மனுவில் மாவை சேனாதிராசா, வீ.ஆனந்தசங்கரி, என்.இந்திர குமார் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பிரிவினை வாதக் கட்சிகளாக நீதிமன்றத்தின் மூலம் பிரகடனப் படுத்தினால் குறித்த கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் திணைக்களம் சட்டரீதியாக இல்லாமல் செய்ய முடியும் என்றும், இதை நோக்காகக் கொண்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதேவேளை தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன இன ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கூட்டமைப்புக்குப் பிரிவினை வாதச் சாயம் பூசுவதன் மூலம் அதன் குரலைப் பலவீனப்படுத்தப் பேரினவாதிகள் முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment