கால வரையறையின்றி தடுப்பிலுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுவிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு!
அவுஸ்திரேலியாவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 36 வயதான குறித்த நபருக்கு புகலிடம் வழங்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு வீசா வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த புகலிடக் கோரிக்கையாளரை காலவரையறையின்றி தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://www.seithy.co...&language=tamil
No comments:
Post a Comment