இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் கொழும்புக்கான பயணம் தொடர்பாக அதிகாரபூர்வமான தகவல் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எனினும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இந்த மாத இறுதியில் கொழும்பு வரவுள்ளதை உறுதி செய்துள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள்சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பான் விவகாரங்களின் தொடர்ச்சியாகவே சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் இடம் பெறுவதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணத்துக்கும் பிரேசிலில் றியோ 20 பிளஸ் மாநாட்டில் இந்தவாரம் நடைபெற்ற மன்மோகன்சிங் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கும் தொடர்பு இல்லை.இந்தச் சந்திப்பு மிகவும் குறுகியதொன்றாகவே இருக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆனாலும், ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இடையிலான உறவுகளில் தேக்கநிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையைத் தொடர விடாமல் உறவுகளை சீர்படுத்துவதே சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணத்தின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது
No comments:
Post a Comment