Translate

Thursday, 21 June 2012

புலனாய்வாளர்களே மக்களைத் தாக்கினர் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. சாடல்


புலனாய்வாளர்களே மக்களைத் தாக்கினர் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. சாடல்
news
 நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்குதல் நடத்தினர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

 
 
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மாலபே வைத்தியக் கல்லூரி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:
 
சர்ச்சைக்குரிய மாலபே வைத்திய கல்லூரியில் அதிகமான மாணவர்கள் பதிவுசெய் யப்பட்டுள்ளனர். அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரி தொடர்பில் சுகாதார அமைச்சு குழு ஒன்றை அமைத்தது. அக்குழு வெளியிட்ட அறிக்கையின் படி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மூன்று, நான்கு வருடங்களாக இந்தக் கல்லூரி அதிகாரமின்றி இயங்குகின்றது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? இவர்களை எப்படிக் கையாள்வது?
சட்டத்தின் அடிப்படையில் இப்பிரச்சினை கையாளப்பட வேண்டும். 
 
சட்டத்தின் அடிப்படையில் இந்த நாட்டில் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படுவதில்லை. ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கும் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் 25 வருடங்களாக மீள்குடியேற முடியாமல் இருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாமல் உள்ளது.
 
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பஸ்களில் சென்ற மக்களின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் நடத்தினர். இப்படித்தான் இந்த நாட்டின் ஜனநாயகம் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment