Translate

Friday, 22 June 2012

விடுதலையாகிய முன்னாள் போராளிகளிடமிருந்து படையினர் அடையாள அட்டைகள் பறிப்பு!


விடுதலையாகிய முன்னாள் போராளிகளிடமிருந்து படையினர் அடையாள அட்டைகள் பறிப்பு!
தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் பேராளிகளுக்கு புனர்வாழ்வு பெற்றவர்கள் என்பதனை நிரூபித்து ஐ.ஓ.எம் சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அடடைகளை இராணுவத்தினர் கட்டாயப் படுத்தி பறித்து வருகின்றனர்.

இராணுவத்தினருடைய இந்தச் செயற்பாட்டினால் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் அச்சத்தினை எற்படுத்தியுள்ளது.

2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன் போது இவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டே விடுதலை செய்யப்பட்டனர் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக இடம்பெயர்ந்தோருக்கான சர்வசே அமைப்பு அடையாள அட்டையினை வழங்கியது.

இந்த அடையாள அட்டைகள் அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் குறித்த நிறுவனத்தினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளையும் செய்து வந்தனர்.

அனால் தற்போது யாழில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெவிக்கப்படுகின்றது.

அந்தந்தப் பிரிவு கிராமசேவையாளர்களிடம் இந்த அடையாள அட்டைகளை பெற்றுத் தருமாறு இராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளதுடன் சில இடங்களில் தாமே நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை பெறப்படுவதற்கு எந்தவிதமான காரணங்களையும் இராணுவம் இதுவரை கூறவில்லை.காரணம் இன்றியே இவை மீளப்பெறப்படுகின்றன.

ஆனாலும் இனிவரும் காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ள முன்னாள் போராளிகளுக்கு ஐ.ஓ.எம் நிறுவனத்தினால் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment