Translate

Saturday 23 June 2012

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.-பிரபா கணேசன்


ஆளும் கட்சி அமைச்சர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெறுமனே அனுப்பி வைப்பதில் பயனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளும் கட்சி அமைச்சர்களை அனுப்புவதில் பயன் கிட்டாது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நானும் தேர்தல் பிரசாரத்திற்காக வடக்கிற்கு சென்றிருந்தேன்.
அரசாங்கம் வாரி வழங்கியிருந்த சலுகைகளையும் அமைச்சர்கள் வழங்கிய பொருட்களையும் வடக்கு மக்கள் வாங்கிக் கொண்டனர். எனினும், பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.
வடக்கு மக்கள் அபிவிருத்தியை மட்டுமன்றி தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினையும் வேண்டுகின்றமை கடந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாக புலப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு தேசிய இன்பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க ஆர்வம் காட்ட வேண்டும். வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் சாதாரண சிவில் நிர்வாகம் ஏற்டுத்தப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தால் மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் அரசாங்கத்திற்கு ஆதவராக வாக்களிப்பார்கள்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டும்.
போர் நிறைவடைந்ததன் பின்னர் நடைபெறும் முதலாவது நாடாளுமன்றத் தெரிவுக்குழு பேச்சுவார்த்தை என்ற காரணத்தினால் இதில் அனைத்து கட்சிகளும் பங்களிப்பினை வழங்க வேண்டும் என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment