Translate

Thursday, 21 June 2012

விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியனுக்காக இலவசமாக சட்ட உதவி வழங்க முன்வந்துள்ள தமிழ் ஆலோசகர் குலேந்திரன்


பிரித்தானியாவின் நீதி மன்றங்களின் தீர்ப்பின்படி சுவீடன் நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள சர்ச்சைக்குரிய விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியன் எசேன்ஜ் (40 வயது) 240000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பிணையில் விடப்பட்டுள்ளார்.
எனினும் தான் சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் நிலையிலிருந்து விடுபடுவதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்  பிரித்தானியாவில் உள்ள எக்குவாடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

மேலும் அவர்  தனக்கு சட்ட உதவி தேவைப்படுகின்றது என்று பிரித்தானிய பத்திரிகைகள் மூலம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து பிரித்தானியாவில் குடிவரவு சட்ட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் குலேந்திரன்  தனது நிறுவனம் மூலம் யூலியனுக்கு சட்ட உதவிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்.
தனது விருப்பம் தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள எக்குவாடோர் தூதரக உயர் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திரு யூலியன் எசேன்ஜ்ன் அகதி கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தனது நிறுவனம் சட்ட உதவிகளை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திரு யூலியன் எக்குவாடோர் நாட்டின் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால்  அங்கு தனக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தான் அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய தலைவர் தொடர்பான சில ரகசியக் குறிப்புக்களை தனது விக்லீக்ஸ் இணையத்தளத்தில் யூலியன் வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment