Translate

Friday, 22 June 2012

தீர்வுக்காக 60 வருடங்கள் ஏமாற்றினோம் – சிங்கள பேரினவாத அமைச்சர்


தீர்வுக்காக 60 வருடங்கள் ஏமாற்றினோம் – சிங்கள பேரினவாத அமைச்சர்

சிங்கள பேரினவாத, மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன
தீர்வுக்காக 60 வருடங்கள் முயற்சித்தவர்கள் 6 மாத செயற்பாட்டில் பங்குகொள்ள முடியாதா? ௭ன்று சிங்கள பேரினவாத,மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் தயக்கத்திற்கு சிங்கள பேரினவாத அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களே இவை.

தன்னை மறந்து இந்த பேரினவாதி இதுவரை சிங்கள பேரினவாதம் மறைத்து வந்த ஓர் உண்மையை தன் வாயாலேயே அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது 60 வருடங்கள் தமிழர்களாகிய நாம் தீர்வுக்காகத்தான் போராடியுள்ளோம் என்பதை ஒப்புக்கொண்டது.
அடுத்து 60 வருடங்களா தீர்வுக்காக முயற்சித்த தமிழர்களை 60 வருடங்களாக தாம் ஏமாற்றியுள்ளதையும் இதன் மூலம் உலகம் அறியவைத்துள்ளார் இந்தப் பேரினவாத அமைச்சர்.

No comments:

Post a Comment