அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதில் கருத்துக்கள் தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே ஜாதிக்க ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ண சிங்க இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...மட்டக் களப்பில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சி மா நாட்டில் சம்பந்தன் எம்.பி. மீண்டும் தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான பிரேரனையை நிறைவேற்றினார். ஆயுதப் போரால் முடியாததை ஹர்த்தால்கள் சிவில் சட்டங்களை மீறல் போன்ற போராட்டங்களாலும் இறுதியாக டிரக் ஹிட் ( நேரடித் தாக்கு) மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிப்பதற்காக மொஹமட் அலி ஜின்னா பிரியோகித்த வார்த்தை டிரக் ஹிட் என்பதாகும். எனவே இது பயங்கரமானதாகும்.
இதனை கண்டித்தே அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழ் மக்களை மீண்டும் பிரிவினை வாதத்திற்குள் தள்ளி விடும் முயற்சியை சம்பந்தன் கைவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் மீண்டும் தமிழ் மக்கள் முள்ளி வாய்க்கால் போன்ற சம்பவங்களை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழ் இன வாதத்தின் தந்தையான செல்வாநாயகம் அதன் பின்னர் அமிர் தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோர் பிரிவினை வாதத்தை ஊக்குவித்து தமிழ் மக்களை அதள பாதாளத்திற்குள் தள்ளினர். பின்னர் சம்பந்தன் மாவை சேனாதி ராஜா போன்றோர் பிரபாகரனை வளர்த்து ஆயுதப் போரை உருவாக்கினர். இதுவும் கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது.
இன்று மீண்டும் சம்பந்தன் சர்வ தேச புலம் பெயர் தமிழர்கள் மூலமாக அதனைக் கையிலெடுத்துள்ளார். இது தமிழ் மக்களுக்கு அழிவைக் கொண்டு வரும் என்ற உண்மையையே அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு தமிழ் நாட்டில் முகவரியைத் தொலைத்து விட்டு தேடும் தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர். இது இலங்கைத் தமிழ் மக்கள் மீதுள்ள அன்பினால் அல்ல. தொலைத்து விட்ட முகவரியை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவே ஆகும்.
கருணா நிதிக்கு இன்று வயதாகி விட்டது. சுயநினைவும் இல்லை. இவ்வாறானதோர் நிலையில் அரசியலிலும் இருப்பில்லை. என்ன செய்வது. இலங்கை தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.
ஜெயலலிதா ,வைகோ, திருமாவளவன் என நடிகர் கூட்டம் தமிழ் நாட்டில் கூத்தாட்டம் ஆடுகின்றனர். இது முட்டாள்களின் செயற்பாடாகும். இதனை நாம் கவனத்தில் கொள்ளவில்லை என்றார் . _
No comments:
Post a Comment