Translate

Friday, 22 June 2012

அமைச்சர் சம்பிக்கவுக்கு இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை:  தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆயுதப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லையே என இலங்கைத் தமிழர்கள் கடும் மன வேதனையில் உள்ளனர். இத்தருணத்தில் இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க மீண்டும் முள்ளிவாய்க்கால் உருவாகும் என்ற தொனியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைத் தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் சம்பிக ரணவக்க பேசியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய சூழலில் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment