கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப் பூ(blogger) என்பது இன்று உலகளாவிய ரீதியில் பிரபல்யமாகக் காணப்படுவதுடன் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஒன்லைன் மூலம் மேற்கொள்ளகூடியதாகக் காணப்படும் வலைப்பூ பதிவுகள் இதுவரை காலமும் கணணிகளைப் பயன்படுத்தியே நிர்வகிக்கக்கூடியதாகக் காணப்பட்டது.
ஆனால் தற்போது அப்பிள் நிறுவனத்தின் அற்புத தயாரிப்பான ஐபோன்களிலும் வலைப்பூக்களை நிர்வகிக்கக்கூடிய வசதியை தரக்கூடிய மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது ஐபோன்கள் தவிர்ந்த ஐபொட், ஐபாட் என்பவற்றிலும் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மென்பொருளினைப் பயன்படுத்தி வலையகத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
1. ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூ கணக்குகளைக் கையாளுதல்.
2. புகைப்படங்களை தரவேற்றம் செய்தல்.
3. லேபல்களை சேர்த்தல்.
4. இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சேர்த்தல்.
5. பதிவுகளை பதிவேற்றம் செய்தல் அல்லது தற்காலிகமாக சேமித்துவைத்தல்.
6. பதிவேற்றப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட பதிவுகளை காட்டுதல்.
No comments:
Post a Comment