மன்மோகன்சிங் ராஜபக்சே நடத்திய பேச்சு வார்த்தை குறித்து, வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் நிருபர்களிடம் கூறியதாவது:
யாழ்ப்பாணத்தில் மின்வசதி அளிக்கும் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது. தமிழர்கள் வாழுகிற இதர இடங்களிலும் இந்த பணி நடந்து வருகின்றன என ராஜபக்சே தெரிவித்தார்.
தமிழர்கள் 3 லட்சம் பேர் முகாம்களில் வசித்து வந்த நிலையில், தற்போது 3 ஆயிரம் பேர்தான் முகாம்களில் உள்ளதாகவும் பிரதமரிடம் ராஜபக்சே கூறினார். இரு நாட்டு உறவுகள் முன்னேற்றம் அடையவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இலங்கைக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் 29 ந் தேதி பேச்சு வார்த்தை நடத்த செல்வார் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment