Translate

Thursday, 21 June 2012

ஈழத்தமிழர் பிரச்சினையை காரணங்காட்டி தேர்தலைப் புறக்கணிக்கிறது தே.மு.தி.க!


ஈழத்தமிழர் பிரச்சினையை காரணங்காட்டி தேர்தலைப் புறக்கணிக்கிறது தே.மு.தி.க!
இலங்கைத் தமிழர் விவகாரத்தினை முன்னிலைப்படுத்தி குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் தீர்மானித்துள்ளது.குடியரசுத் தேர்தலில் வாக்களித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாது என்பதால், தேர்தலில் வாக்களிக்காதிருக்க தீர்மானித்ததாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந் குறிப்பிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல், இலங்கைத் தமிழர் பிரச்சினை, கச்சதீவு, காவிரி, முல்லைப்பெரியாறு என பல விடயங்களை தீர்ப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ சங்மாவையும், திராவிட முன்னேற்றக் கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியையும் ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், விஜயகாந் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்தமுறை சட்டமன்றத் தேர்தல்களில் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் எதிர்க்கட்சியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment