Translate

Friday 30 November 2012

விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"

"விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"
===================
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''  இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
 
இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில்,  இருப்பவர்கள் கோர நரகத்தில். 

பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. 

கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது. 

இரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது. 

பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள். 

எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது. 

அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள். 

இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இது அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டு விடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது? 

இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது? 

இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல. 

ஆனால் ஒன்று. விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று, மீண்டும் எழுவதும்தான்.
 
ஆனந்த விகடன்''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:

இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். 

பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது.

கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது.

இரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது.

பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள்.

எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது.

அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள்.

இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டு விடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது?

இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது?

இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல.

ஆனால் ஒன்று. விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று, மீண்டும் எழுவதும்தான்.

ஆனந்த விகடன்

No comments:

Post a Comment