மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் கடத்தப்பட்டமைக்கு ஜே.வி.பி கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் நாட்டின் உத்தியோகப்பற்றற்ற சட்டமாக மாற்றமடைந்துள்ளது என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 29 பேர் கடத்தப்பட்டுள்ளனர். வெள்ளை வான் கலாச்சாரம் நட்டின் சட்டத்தின் ஓர் அங்கமாக மற்றமடைந்துள்ளது. கடத்தல் சம்பங்களை தடுத்து நிறுத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
குற்றவாளிகளை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் மரபு மருவி வருவதாக அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment