அரசமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்கினால் கடுமையாக எதிர்ப்போம். அத்தகைய முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
23 ஆம் பிரிவு விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் பதினோராவது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பிரதம பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
23 ஆம் பிரிவு விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் பதினோராவது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பிரதம பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசமைப்புக்கான பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும். அதனூடாக மாகாண சபைகளையும் இல்லாதொழிக்க வேண்டும் என இனவாதக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சிறுபான்மையினர் எதிர் நோக்கியுள்ள பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு மத்தியில், அரசிலுள்ள சில அமைச்சர்களும் அரசமைப் புக்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இல்லா தொழிக்க வேண்டும் என்று கூறுவது கவலை தரும் விடயம்.
எனினும் அத்தகைய தொரு நிலை ஏற்படுவதை ஒருபோதும் நாம் அனு மதிக்க முடியாது. இந்த நாட்டில் சிறு பான்மை மக்களுக்குள்ள ஒரேயொரு அரசமைப்புத் திருத்தச் சட்டம் அதுவாகும்.
அதன்மூலம் சிறுபான்மை மக்களுக்குள்ள குறைந்த அதிகார நிலையம் மாகாண சபையாகும். அதையே இல்லாதொழிக்க முனைவது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கும் துரோகச் செயற்பாடாகும்.
அந்தவகையில் பதின் மூன்றாவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை இல்லா தொழிக்கும் எத்தகைய நட வடிக்கைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதர வளிக்காது.
அந்த விடயத்தில் கைவைக்க முனையும் எந்த சக்திக்கும் முஸ்லிம் காங்கிரஸோ, நாமோ துணை போகப் போவதில்லை. நாம் அரசில் அங்கம் வகித்தாலும் எத்தகைய விட்டுக் கொடுப்புமின்றி எமது நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக நிற்போம்.
பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்க முனைந் தால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நிலைமையும் ஏற்படும்.
அந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
கல்விக்கு முக்கியம்
என்னைப் பொறுத்தவரை நான் கல்வித்துறைக்கு முக்கியத்துவமளித்து செயற்பட்டுவரும் ஒருவன். அதன் காரணமாகவும், மக்கள் பிரச்சினைகளில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாலும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக மீண்டும் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏதுவாக என் சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பேன். விவசாயிகள், மீனவர்கள் தொடர்பிலும் என் பணிகளை விஸ்தரித்துச் செயற்பட திட்டமிட்டுள்ளேன்.
அரிசிஆலை
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச விவசாயிகள் தமது உற்பத்தி நெல்லை குறைந்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டிய துரதிர்ஷ்ட நிலைமை தொடர்ந்து வருகின்றது.
அந்தவிடயத்தில் நான் அம்பாறை மாவட்ட செயலருக்கு எடுத்து விளக்கியுள்ளேன். கரையோரப் பிரதேசத்தில் பெரிய நவீன அரிசி ஆலை ஒன்றை நிர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளேன். அதற்கு அவரும் இணக்கம் தெரிவித்துள்ளதால் எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளும், நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். என்றார்.
No comments:
Post a Comment