Translate

Sunday, 30 December 2012

பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் காலமானார்


பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் 27.12.2012 அன்று அதிகாலை காலமானார்.

நவா அண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் இவர்இ தமிழ்த் தேசியத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததோடுஇ பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டதின் அனைத்துச் செயற்பாடுகலிலும் முன்னின்று உழைத்து இன்று வரையும் உறுதியோடு குரல் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.


1986 முதல் 1992 வரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். டாக்டர் ஜெயகுலராஜா அவர்கள் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து தமிழர்  புனர்வாழ்வுக்கழகத்தின் வேலைப்பாடுகளை விரிவுபடுத்திய காலகட்டத்தில் பிரித்தானியாவில்  தமிழர் புனர்வாழ்வுக்கழகம் திரு நவநாயகம் அவர்களின் தலைமைல் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

தாயகதில் விடுதலைப் போராட்டம்  தீவிரமடைந்த  காலத்தில் சிறி லங்கா அரசின் இராணுவ அடக்கு முறையில் இருந்து தப்பி வெளி நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில்  கணிசமானோர் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அக்காலத்தில் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுஇ அவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அவர்களது செயற்பாடுகள் ஒய்வுபெற்ற காலத்தில் திரு நவநாயகம் அவர்களும் அவ்வமைப்பிற்  கூடாக  சிறந்த சேவையை வழங்குவதற்குப் பெரிதும் துணை நின்றார்.

1985ல் இடம் பெயர்ந்து வந்தவர்களின் எதிர் கால வாழ்வுக்காகவும் அவர்களின் கலை கலாச்சார மேம்பாடுகளை வளர்ப்பதற்கும்இ தாயக விடுதலையை புலம்பெயர் மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடனும் வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

1986ம் ஆண்டு ஆரம்பித்த இத்தமிழ்ச்சங்கம் தனது வெள்ளி விழாவின் போது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வோல்தம்ஸ்ரோ தமிழ் மக்களின் தந்தை என்று கௌரவிக்கப்பட்டார். இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காகவும் அவர்களை தமிழ்ச் சங்க ஒழுங்கிற்குள் கொண்டு வருவதற்காகவும் வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாடு மற்றும் விளையாட்டுத் துறைகளை உருவாக்கிஇ இவற்ரின் வளர்ச்சிக்காகவும் முன்னின்று உழைத்தார். லண்டனில் ராகாஸ் இசைக்குழுவை உருவாக்கி அதனையும் தேசப்பற்றோடு பயணிக்க வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தது.

வோல்தம் பொறஸ்ட் பகுதி வாழ் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைக்கு தான் சார்ந்த அமைப்பிற் கூடாகவும்இ தனிப்பட்ட முறையிலும் உதவிகளை வழங்கி  அவர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுள்ளார்.

கடந்த 25 வருட காலமாக பிரித்தானியாவில் இயங்கி வந்த போன்ற சமூக அமைப்புக்களுடன் தொடர்ச்சியாக தன் மறைவு வரை இயங்கி வந்தார். இவர் ஓர் தேசப்பற்றாளரும் சமூக தொண்டர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் வீ ரச்சாவைத்தழுவிய எமது போராளிகளை நினைவு கூர்ந்து மலர் வணக்கம் செய்யும் மாவீ ரர் நாள் நவம்பர் 27இ 1990ம் ஆண்டு வோல்தம்ஸ்ரோ நகர மண்டபத்தில் முதன்முறையாக சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.

1985இல் கலை பண்பாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு பல வருடங்களாக அதனை தாயக விடுதலையை நோக்கி நெறிப்படுத்தி வந்துள்ளார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்  வேலைப்பாடுகளை விரிவுபடுத்திய காலகட்டத்தில் பிரித்தானியாவில்  தமிழர் புனர்வாழ்வுக்கழகம் திரு.நவநாயகம் அவர்களின் தலைமைல் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

தாயகதில் விடுதலைப் போராட்டம்  தீவிரமடைந்த  காலத்ïல் சிறி லங்கா அரசின் இராணுவ அடக்கு முறையில் இருந்து தப்பி வெளி நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில்  கணிசமானோர் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அக்காலத்தில் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுஇ அவர்களின் அரசியல் தஞ்சக்
கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அவர்களது செயற்பாடுகள் ஒய்வுபெற்ற காலத்தில் திரு நவநாயகம் அவர்களும் அவ்வமைப்பிற்  கூடாக  சிறந்த சேவையை வழங்குவதற்குப் பெரிதும் துணை நின்றார்.

தாயக விடுதலை நோக்கி அயராது உழைத்து இன்று உறங்கிப் போயிருக்கும் நவா அண்ணாவின் கனவை நனவாக்க நாம் அயராது உழைப்போம். 

No comments:

Post a Comment