இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமரை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். Rochdale Simon Danczuk என்ற இந்த உறுப்பினர், பிரதமர் கெமருன், இலங்கை மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் மீண்டும் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுள்ளார்.
பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் இந்த வருட ஆரம்பத்தில் ஆளும் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதி ஒருவரால் கொலை செய்யப்பட்டார். எனினும் இந்தக்கொலை தொடர்பில் காத்திரமான விசாரணைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. இந்தநிலையில் அந்தநாட்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது கெமரூனுக்கு உகந்த செயற்பாடாக இருக்காது என்றும் Rochdale Simon Danczuk குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment