பிரித்தானியர் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
தங்காலை விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜையை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட எட்டு பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தங்காலையில் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜையொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். ஷேய்கா ஸமான் என்ற பிரித்தானியர் கொலை செய்யப்பட்டதுடன் அவரது காதலியான விக்டோரியா எலக்சாண்டரா காயமடைந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மரபணு அறிக்கை இதுவரை கிடைக்காததால், விசாரணைகளை வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ம் உத்தரவிட்டது.தங்காலை விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜையை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட எட்டு பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தங்காலையில் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜையொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். ஷேய்கா ஸமான் என்ற பிரித்தானியர் கொலை செய்யப்பட்டதுடன் அவரது காதலியான விக்டோரியா எலக்சாண்டரா காயமடைந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மரபணு அறிக்கை இதுவரை கிடைக்காததால், விசாரணைகளை வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment