Translate

Saturday 14 May 2011

சிறீலங்கா "கிறிக்கற்" அணியை புறக்கணிக்கக் கோரி இன்று லண்டனில் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்!


லண்டன் வந்துள்ள சிறீலங்கா "கிறிக்கற்அணியை புறக்கணிக்கக் கோரியும்தமிழர்களைகொன்றுகுவித்து மனிதமே அஞ்சும் அளவிற்கு இனப்படுகொலையை புரிந்த சிறீலங்கா அரசைதண்டிக்கக் கோரியும் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இன்று காலை 10 மணி முதல் லண்டனில் உள்ள Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டியில் கலந்துகொண்ட சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிர்ப்பு தெரிவித்தே மைதானத்தின்முன்புறமாக உள்ள பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
"தமிழர் இனவழிப்பு நாள் - மே 18" "சிறீலங்காவில் தமிழின அழிப்பை நிறுத்து" "போர்க்குற்றம்புரிந்த சிறீலங்காவினது கிறிக்கற் அணியை புறக்கணி" "போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசைகைதுசெய்து சர்வதேச நீதிமன்றி நிறுத்துபோன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகள்மற்றும்பனர்களை தாங்கியவாறு மைதானத்திற்கு வெளியில் திரண்ட தமிழ் மக்கள் உரத்த குரலில்சிறீலங்கா அரசினது கொடூரங்களை அம்பலப்படுத்தி வீதியால் செல்வோருக்கு விளக்கங்களையும்,துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினர்.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் மாலை 6 மணி வரை இடம்பெற்றது.குளிரோடு சேர்ந்த பலமான காற்று வீசியபோதும் பெரியோர்களும் சிறுவோர்களுமாக தளராதுஉறுதியோடு நின்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமையை காணமுடிந்தது.

No comments:

Post a Comment