தமிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்தமை துரோகச் செயலாகும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்த விழாவில் ஒன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசு விருந்தினராக புதுடெல்லிக்கு வரவழைத்து அவருக்கு பொருளாதார உதவிகளை செய்தார்.
அதே சமயம், விருந்தினராக வரவழைத்து, எல்லா உதவிகளையும் செய்வோம் என்று நாம் உறுதியளித்ததற்கு மாறாக, தமிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தையும் அனுப்பிவைத்தோம். இது துரோகச் செயலாகும்.
இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நடத்தையை என்னால் இன்று வரை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றார்.
No comments:
Post a Comment