மாவீரர் தினத்தையோட்டி நேற்று மாலை பல்கலைக்கழத்தில் சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளை மாணவர்கள் செய்தவேளை அதனை தடுக்கும் முகமாக பெருமளவான இராணுவத்தினர், பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் யாழ். பல்கலைக்கழக சூழலில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடமாதியதை கண்டித்தும் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் இராணுவத்தினர் அத்துமீறி நூழைந்ததை கண்டித்தும் இன்று காலை 11 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைகழக வாசலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணித்தியாலங்களாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பூட்டியிருந்த வாசல் கதவினை திறந்து வெளியே வந்து மற்றுமொரு வாசலினால் உள்ளே செல்ல முயன்றவேளை மாணவர்கள் மீது வெளியே காத்திருந்த பொலிசாரும் இராணுவத்தினரும் சேர்ந்து வயர்கள், பொல்லுகள், துப்பாக்கி பிடி என்பனவற்றால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தினார்கள்.
சம்பவ இடத்தில் நின்ற ஊடகவியலாளர்கள் மீதும் வீதியால் சென்றவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
இத்தாக்குதல் சம்பவத்தில் பல மாணவ, மாணவிகள் அடிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். சில மாணவர்களை பொலிசார் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி வைத்திருந்தார்கள். பின்னர் அவ்விடத்துக்கு வந்த பீடாதிபதிகள் பொலிசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்களை மீட்டு சென்றார்.
அதே நேரம் சம்பவ இடத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவனுடன் இராணுவத்தினர் முரண்பட்டார்கள் பின்னர் பொலிசார் வந்து அவர்களை சமாளித்தார்கள். அவ்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவரின் வாகனத்துக்கு கல் வீசியுள்ளார்கள்.
இதனால் அவரின் வாகன கண்ணாடிகள் உடைந்துள்ளன. நேற்று மாலை பல்கலைக்கழக சூழலில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து அவ்விடத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மீதும் அவருடன் ஊடகவியலாளர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடாத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment