Translate

Friday 30 November 2012

தனிநாடு கோரும் பலஸ்தீனத்திற்கு ஐநா பச்சைக்கொடி! வாக்கெடுப்பில் வெற்றி


தனிநாடு கோரும் பலஸ்தீனத்திற்கு ஐநா பச்சைக்கொடி! வாக்கெடுப்பில் வெற்றிஇஸ்ரேலின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் பலஸ்தீன இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு நாடாக அங்கீகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் 41 நாடுகள் பங்கேற்கவில்லை. 

இதன்படி உறுப்புரிமையில்லா கண்காணிப்பாளர் நாடாக பலஸ்தீனத்தை ஐநா அங்கீகரிக்க அதன் பொதுச் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பானது தனி நாடு கோரும் பலஸ்தீனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது. 

இந்த வாக்கெடுப்பு முடிவு மூலம் இரு நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பலஸ்தீனத் தலைவர் மொஹமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இந்த வாக்கெடுப்பானது சமாதான முனைப்புக்களை பின்னடையச் செய்யும் என இஸ்ரேல் பிரதிநிதி கூறியுள்ளார். 

பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் ரமல்லா நகரில் பாரியளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment