பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம்! சீற்றத்தில் இலங்கை அரசு!
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வினை சீர்குலைப்பதற்கான மறைமுகமாக முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
நாளை வியாழக்கிழமை (29-11-2012) பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வான புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கம் அறிவித்துள்ளது.
BRENT TOWN HALL எனும் முகவரிக்கு மாற்றாக
Zoroastrian Centre, 440 Alexandra Avenue, Rayners Lane, HA2 9TL.
Nearest Tube: Raners Lane
எனும் புதிய முகவரிவரியில் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தொடக்க அமர்வு இடம்பெறவிருக்கின்றது.
தொடக்க நாள் அமர்வில் பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
No comments:
Post a Comment