Translate

Friday, 30 November 2012

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க முடியும் - அசாத் சாலி


ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க முடியும் - அசாத் சாலி
ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க முடியும் என கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாராளுமன்ற அதிகாரங்களை அவரது மூத்த சகோதரர் சமால் ராஜபக்ஷவும் கட்டுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 
நீதிமன்றத்துறை மட்டுமே வெற்றிடமாக இருப்பதாகவும் பிரதம நீதியரசராக, ஜனாதிபதியின் உறவினர்கள் எவரையும் நியமிப்பதன் மூலம் அந்த வெற்றிடத்தையும் நிரப்ப முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 500 பில்லியன் ரூபா என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலதிமாக பணத்தை அச்சிட்டு கடன்களைப் பெற்றுக் கொள்வதனை தவிர வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடு செய்ய அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment