Translate

Friday, 30 November 2012

இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களை வெளியுறவு அமைச்சர் ஏற்றுக்கொண்டார்: விக்கிலீக்ஸ்

News Service
எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் போன்ற விடயங்களில் தம்மை தனிப்பட்ட பொறுப்பாளராக எடுத்துக்கொள்ளலாம் என்று இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்திருந்ததாக விக்கீலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர் பௌச்சரிடம் இந்த உறுதிமொழியை போகல்லாகம வழங்கியிருந்தார் என்று அமெரிக்கத் தூதரகத்தின் செய்தி அனுப்பலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகாரங்கள் தமிழர்களுக்கு பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அத்துடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று போகல்லாகம உறுதியளித்திருந்தார். போரினால் மக்கள் இடம்பெயர்ந்த போது தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை இதன்போது போகல்லாகம ஏற்றுக்கொண்டுள்ளர்.
எனவே எதிர்காலத்தில் அனைத்து விடயங்களும் சரியாக இடம்பெறும் என்பதற்கு தம்மை தனிப்பட்ட பொறுப்பாளராக அமெரிக்கா ஏற்றுக்கொள்ளலாம் என்றும் போகல்லாகம உறுதியளித்திருந்ததாக அமெரிக்க தூதரகம் வாசிங்டனுக்கான செய்தி அனுப்பலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment