Translate

Friday, 30 November 2012

வேலைக்கு அழைத்துச் சென்று குவைத் விபசார விடுதியில் ஆந்திர பெண்கள் விற்பனை


குவைத் வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆந்திர இளம்பெண்கள் பேர் அங்குள்ள விபசார விடுதியில் விற்கப்பட்டனர். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் பார்வதி (18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கிராமத்தில் கூலிவேலை செய்து வந்தார்.



குவைத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை இருப்பதாக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த புரோக்கர் ரமணா ரெட்டி பார்வதி பெற்றோரிடம் கூறினார். இதை நம்பிய அவர்கள் ரமணா ரெட்டியிடம் ரூ.70 ஆயிரம் கொடுத்து பார்வதியை குவைத் அனுப்பி வைத்தனர்.


குவைத்தில் உள்ள ரமணா ரெட்டி மனைவி ஆஷா பார்வதியை வரவேற்றார். ஆனால் வேலை கொடுக்காமல் அங்குள்ள விபசார விடுதியில் ரூ. 3லட்சத்துக்கு அவளை விற்றுவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவளை விபசார கும்பலை சேர்ந்தவர்கள் சித்ரவதை செய்தனர். இதுபற்றிய தகவல் பார்வதி பெற்றோருக்கு தெரியவந்தது.


மேலும் கொத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு இளம்பெண்ணையும் ரமணா ரெட்டி குவைத் அனுப்பி விபசார விடுதியில் விற்று உள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பிய புரோக்கரிடம் ரூ.40ஆயிரம் ரொக்கமாகவும்,ரூ.1 1/2 லட்சத்துக்கு கடன் பத்திரமும் கொடுத்து தனது மகளை மீட்டனர்.


அதேபோல் பார்வதியின் பெற்றோரும் புரோக்கர் ரமணா ரெட்டிக்கு ரூ.40 ஆயிரமும்ரூ.1 1/2 லட்சத்துக்கு பணம் கொடுத்து மகளை மீட்டு வந்தனர்.


ஆந்திரா திரும்பிய இளம்பெண்கள் சித்தூர் மாவட்ட டி.எஸ்.பி. ராகவா ரெட்டியிடம் புகார் செய்தனர். பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment