இன்று வியாழக்கிழமை (29-11-2012) முதல் எதிர்வரும் (02-12-2012) ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவிருக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்விற்கான மண்டபங்களை இலக்கு வைத்து பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் தூதரகம் செயற்பட்டு வருகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கவுன்சில் மண்டபங்களுக்கு சிறிலங்கா ஒரு அரசென்ற வகையில் தனது அழுத்தங்களை கொடுத்து முடக்கி வருகின்றது.தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்கும் சிறிலங்காவின் இந்த பதிலடி கொடுக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராளுமன்ற அமர்வின் தொடக்க நிகழ்வினை முருகதாசன் திடலில் உள்ள மண்டபத்தில் மேற்கொள்ளவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை முருகதாசன் திடலில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வின் தொடக்க நிகழ்வில் அனைத்து மக்களையும் பங்கெடுத்து ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
|
No comments:
Post a Comment