நாட்டின் அரசியல் வாதிகள் என்னை விசாரணைக்கு உட்படுத்தியமை சட்டத்திற்குப் புறம்பானது என பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 14 குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
அதற்கமைய நீதியரசரை விசாரணை செய்ய பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.
தனக்கெதிரான இவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனவும் பிரதம நீதிரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் அரசியல்வாதிகள் என்னை விசாரணைக்கு உட்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது.
எனினும் அரசினால் முன்வைக்க்ப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களையும் முறியடித்து விசாரணைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளேன்.
அத்துடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவினருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விசாரணைகளை நடாத்துவதற்கு அதிகாரம் கிடையாது.
விசாரணைகளை மேற்கொள்ள அரசியல் சார்பற்ற சுயாதீனமான தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பிரதம நீதியரசர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment