Translate

Wednesday 28 November 2012

யாழ் பல்கலைகழக மாணவர்களை காக்க ஐ.நாவினைக் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !


மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது  சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று  இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா பொதுச்செயலருக்கு அவசர கடிமொன்றினை அனுப்பியுள்ள பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிங்கள படைகளினது வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்றினை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார்.
இதன் முதற்படியாக கொழும்பில் உள்ள ஐ.நா. நாடு அதிகாரிகள் குழுவினை உடனடியாக விரைந்து யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக பெண்கள் தங்குமிட விடுத்திக்குள் உட்புகுந்த சிறிலங்கா இராணுவத்தினை அத்துமீறல் நடத்தை குறித்து அச்சத்தினை தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கடந்த காலங்களில் தமிழ் பெண்கள் மீதான சிங்கள படைகளது பாலியல் துன்புறுத்தல்கள் நினைவிற்கொண்டு இந்த அச்சத்தினை ஐ.நா பொதுச்செயலருக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் மீதான சிறிலங்கா படைகளது கொடூரத் தாக்குதல் குறித்து நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமைய அதிகாரிகளை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விரைவில் சந்திக்க இருக்கின்றார்.

No comments:

Post a Comment