.jpg)
பல்லலை மாணவர்கள் மீதான தாக்குதல்,கைது,வாகனம் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்ககுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்று பிற்பகல் சிவகுரு நாதர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதியில் நடத்தியிருந்தார்.
நாட்டில் நல்லிணக்கம் பற்றி அரசு பேசிவருகிறது.இந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கழுக்கு வாழ்வுரிமைக்கான சுதந்திரத்தில் இராணுவத்தினர் அனாவசியமாகத் தலையிட்டுவருகின்றனர்.இந்த நிலை தெடருமானால் இன்னும் 5 வருடங்களுக்கு வடக்கு கிழக்கில் இன நல்லிணக்கத்தை இவர்களால் நிலைநாட்டவே முடியாது. இந்த துர்பாக்கிய நிலையே வடக்கில் இப்போது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதி நிதி என்ற அடிப்படையில், மாணவர்கள் என்னை அழைத்தார்கள்.தங்களுக்கு இராணுவத்தாலும்,பொலிஸாராலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தலையிட்டு எங்களுக்க உதவுங்கள் என்று மாணவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.
இந்த நிலையிலேயே நான் பல்கலைக்கழகத்துக்கு சென்றேன். அப்போது அங்கு கூடிநின்ற இராணுவத்தினரும் பொலிசாரும் என்னை உள்ளே விடவில்லை. நான் அவர்களுடன் வாக்குவாதப்பட்டு ஒருவாறு உள்ளே சென்றேன். அந்த சமயத்தில் எனது வாகனம் மீது அங்கு நின்றிருந்த சிவிலுடையணிந்தவர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். இதனை அருகில் நின்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் பார்த்துக்கொண்டே நின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர்கள் என்னுடன் நடந்துகொள்ளவில்லை.அநாகரிகமாகவே நடந்துகொண்டனர். இதை யாழ். பொலிஸ் சிலையப் பொறுப்பதிகாரியும் பார்த்துக்கொண்டு நின்றார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களையும்,தமிழ் மக்களையும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது எதிரிகளாகவே பார்க்கின்றனர்.தமிழ்மக்களது உரிமைகளில் அனாவசியமாகத் தலையிட்டு அவர்களது சுதந்திரத்தை குழப்ப முற்படுகின்றனர்.
இவ்வாறான அராஜகங்களை நாம் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இன்று இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் அரசுக்கு கூட்டமைப்பு சார்பாக முழு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் மீதாக கெடுபிடிகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
நேற்றும் இராணுவத்தினர் என்மீது கல்வீசித் தாக்கினர். இன்றும் வாகனத்தைத் தாக்கியுள்ளனர். இதுவிடயங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு,நாடாளுமன்றம் என்பவற்றின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளேன்.- என்றார்.
No comments:
Post a Comment